Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

கல்லூரி மாணவியை ஓடும் இரயில் முன் தள்ளிவிட்டு படுகொலை... சென்னையில் அதிர்ச்சி..

Nandhinipriya Ganeshan October 13, 2022 & 15:54 [IST]
கல்லூரி மாணவியை ஓடும் இரயில் முன் தள்ளிவிட்டு படுகொலை... சென்னையில் அதிர்ச்சி..Representative Image.

சென்னை: தனியார் கல்லூரியில் படித்து வந்த சத்யா (20) என்ற மாணவி இன்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவர் ரயில் வந்தபோது சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இளைஞர் தள்ளியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சத்யா மீது ரயில் மோதியதில் இளம்பெண் சத்யா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். ரயில் சென்ற பிறகு தண்டவாளத்தில் கிடந்த மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மாணவியை கொலை செய்து விட்டு  தப்பி ஓடிய இளைஞரை அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தின் காரணமாக மாணவியை இளைஞர் தள்ளி கொலை செய்தாரா ?என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக  நுங்கம்பாக்கத்தில் சுவாதி என்ற இளம் பெண் பட்டப்பகலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை நகரில் பெரும் பரபரப்பையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்