திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் குடி மக்களின் தொந்தரவால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். சிலுவத்தூர் ரோடு காட்டுமடம், ஏர்போர்ட் நகர் பகுதியில் நேற்று இரவு குடி போதையில் சுற்றித் திரிந்த பேசாம தாடிட்டே வீட்டுக்கு போகாம, அங்கிருந்த சரக்கு வாகனத்தின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். மேலும் கடைகள் முன்பிருந்த விளம்பர பலகைகளை அடித்து, கிழித்து சேதப்படுத்தினர்.
இன்று காலை வியாபாரத்தை தொடங்க வந்த தொழிலாளர்கள் இப்படி அலங்கோலமாக இருக்கும் அவர்களின் கடையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஒரு நாள் முழுக்க வேலை செய்து நிம்மதியாக வீடு திரும்பி அடுத்த நாள் வேலை செய்ய வரும் போது இந்த கோலத்தில் தங்களின் கடைகளை பார்த்து பயமும், வேதனை அவர்களை உலுக்கி எடுக்கிறது. அதே பகுதியில் தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புது மாப்பிளை ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இப்படி இரவு நேரங்களில் குடி போதையில் திரிவரர்களால் பொது மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்லவும் பயமாக இருக்கிறது என்றனர். அதனால் காவல் நிலையத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…