Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

ஈரோடு இன்ஜியரின் புதிய கண்டுபிடிப்பு… ஏழாண்டுக்குப் பிறகு கிடைத்த வெற்றி..! மிகப்பெரிய பிரச்சனையே இல்லாம போகப் போகுது..

Gowthami Subramani October 08, 2022 & 15:45 [IST]
ஈரோடு இன்ஜியரின் புதிய கண்டுபிடிப்பு… ஏழாண்டுக்குப் பிறகு கிடைத்த வெற்றி..! மிகப்பெரிய பிரச்சனையே இல்லாம போகப் போகுது..Representative Image.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், எரிபொருளை சேமிக்கும் வகையில் அமையும் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். ஏழாண்டுப் போராட்டத்திற்குப் பிறகே மத்திய அரசு இந்த இயந்திரத்திற்கான காப்புரிமையை வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே முகாசிபிடாரியூரில் வசிப்பவர் நேரு என்பவர். இவருடைய வயது 59. இவர் பல வருடங்களாக, எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் அமையும் இயந்திரம் ஒன்றை உருவாக்கினார்.

ஈரோடு இன்ஜியரின் புதிய கண்டுபிடிப்பு… ஏழாண்டுக்குப் பிறகு கிடைத்த வெற்றி..! மிகப்பெரிய பிரச்சனையே இல்லாம போகப் போகுது..Representative Image

அதிகரிக்கும் வாகன பயன்பாடுகள்

தற்போது, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், விலைவாசி உயர்தல், பொருளாதார பாதிப்பு உள்ளிட்டவற்றால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உள்ளிட்ட எரிபொருளின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

ஈரோடு இன்ஜியரின் புதிய கண்டுபிடிப்பு… ஏழாண்டுக்குப் பிறகு கிடைத்த வெற்றி..! மிகப்பெரிய பிரச்சனையே இல்லாம போகப் போகுது..Representative Image

மாசுகட்டுப்பாட்டிற்கான தீர்வு

நாம், அத்தியாவசியப் பணிக்காக குறைந்த தூரத்திற்கு சென்றாலும், இரு சக்கர வாகனங்கள் முதல் கார்கள் வரை அனைத்துமே அதிகமாகப் பயன்படுகிறது. இதன் காரணமாக, இதற்கான செலவும் அதிகமாகி வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே, ஈரோட்டைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் இயந்தியம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதற்கு மத்திய அரசின் காப்புரிமை பெறுவதும் அவசியம் ஆகும். ஏழாண்டுப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது அவர் வடிவமைத்த இயந்திரத்திற்கு மத்திய அரசின் காப்புரிமையைப் பெற்றுள்ளார்.

ஈரோடு இன்ஜியரின் புதிய கண்டுபிடிப்பு… ஏழாண்டுக்குப் பிறகு கிடைத்த வெற்றி..! மிகப்பெரிய பிரச்சனையே இல்லாம போகப் போகுது..Representative Image

இன்ஜினியர் நேரு தெரிவிப்பது

இது குறித்த இன்ஜினியர் நேரு அவர்கள் தெரிவிக்கையில்,”ண்ஹான் கோவையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கை கடந்த 1983 ஆம் ஆண்டு முடித்தேன். பின்னர், சென்னிமலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 17 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். பிறகு, இரு சக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களுக்காக கேஸ் எரிவாயு பொறுத்த்ம் கருவிகளை கண்டுபிடித்து இந்தியா முழுவதும் மார்க்கெட்டிங் செய்தேன். ஆனால், இதற்கு காப்புரிமை கிடைக்காததால், அதனை விட்டு விடேன்.

நான் விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தேன். இருப்பினும், சுமார் 7 ஏக்கரில் வறண்ட நிலத்தை ஒன்றை வாங்கி அதனை சமன் செய்து விளை நிலமாக மாற்றி, அதில் தினந்தோறும் 2 டன் தக்காளி மற்றும் 600 கிலோ மிளகாய் உற்பத்தி செய்தேன்.

மேலும், பொதுமக்களுக்குப் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக, கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியில் உள்ள Technology Business Incubator உடன் இணைந்து, பெட்ரோல் பயன்படுத்தி ஓடப்படும் கார்களுக்கு எரிபொருள் சேமிப்பு கருவியை வடிவமைத்தேன். அதே சமயம், நாட்டிற்கு மிகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தேவை என்பதற்காக, இரவு பகல் பாராது உழைத்து வாகனங்களில் இருந்து வெளியேறக் கூடிய நச்சுப்புகையை முழுமையாக கட்டுப்படுத்தும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்தேன்.

இந்த இயந்திரம் மூலம், தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை காற்றுடன் சேர்ப்பதன் மூலம், இன்ஜினுக்குள் செல்லும் எரிபொருள் முழுமையாக எரிக்கப்படாமல் கரித்துகள்களாக வெளியேறுவதைத் தடுத்து, அது இயந்திரத்திற்குள் முழுவதுமாக எரிக்கப்படுகிறது. இதன் மூலம், புகை குறைவதைத் தடுக்கவும் முடியும். அதே போல எரிபொருள் வீணாவதைத் தடுக்கவும் முடியும்.” என்று கூறினார்.

ஈரோடு இன்ஜியரின் புதிய கண்டுபிடிப்பு… ஏழாண்டுக்குப் பிறகு கிடைத்த வெற்றி..! மிகப்பெரிய பிரச்சனையே இல்லாம போகப் போகுது..Representative Image

இயந்திரத்திற்கான காப்புரிமை

இந்த கண்டுபிடிப்பிற்கு மத்திய அரசிடம் காப்புரிமை பெற 7 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது மே 5, 2015 ஆம் நாள் அன்று விண்ணப்பித்தேன். அதன் பின், அரசு இது போன்ற கண்டுபிடிப்பை உலக அலவில் வேறு யாராவது செய்துள்ளார்களா என்பதைக் கண்டறிவதற்கு, மத்திய அரசு கடந்த நவம்பர் 11, 2016 அன்று உலக அளவில் வெளியீடு செய்தது.

அதன் பிறகு இது போன்ற கண்டுபிடிப்பை யாரும் செய்யவில்லை என்பதை உறுதி செய்த பிறகு, செப்டம்பர் 22, 2022 அன்று காப்புரிமையை வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும், சேமிக்கும் இயந்திரமாகவும், மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இயந்திரத்திற்கு மத்திய அரசின் காப்புரிமை கிடைத்தது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது எனக் கூறினார்.

ஈரோடு இன்ஜியரின் புதிய கண்டுபிடிப்பு… ஏழாண்டுக்குப் பிறகு கிடைத்த வெற்றி..! மிகப்பெரிய பிரச்சனையே இல்லாம போகப் போகுது..Representative Image

எரிபொருள் சேமிக்கும் இயந்திரத்தின் பயன்பாடுகள்

நேரு கண்டுபிடித்த இந்த இயந்திரத்தை இரு வகைகளில் பயன்படுத்தலாம். அனைத்து வாகனங்களிலும் நிரந்தரமாகப் பொருத்திக் கொள்ள முடியும். இதே போல, நடமாடும் வாகனங்கள் மூலமாகவும், சர்வீஸ் சென்டர்கள் மூலமாகவும் பயன்படுத்தலாம். அதே போல, வாகனங்களுக்கு ஏற்றாற் போல, பெரிதாகவும், சிறியதாகவும் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்