Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

ஈரோடு அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உட்பட 3 பேர் கைது..!

madhankumar August 03, 2022 & 12:07 [IST]
ஈரோடு அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உட்பட 3 பேர் கைது..!Representative Image.

கோபி அருகே உள்ள கடத்தூர் புதுக்கொத்துகாடு என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரகுமார் என்பவர் மகன் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோர் முடிவு செய்தனர்.

இதுகுறித்து சைட்லைன் ஆலோசகர் ஈரோட்டை சேர்ந்த தீபக் குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் சிறுமியின் பெற்றோரிடம் சென்று சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என கூறியுள்ளார். ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சிறுமியின் பெற்றோர் அவருக்கும் சுரேஷ்குமாருக்கும் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் செய்திகளை அன்றாடம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்

இது குறித்த புகாரின் பேரில் கோபி அணைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த மணமகன் சுரேஷ் குமார், மணமகனின் பெற்றோர் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் சுரேஷ்குமார், அவரது தந்தை வீரக்குமார் சிறுமி யின் தாயார் ஆகியோர் கைது செய்து கோபி நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்த ப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்