Thu ,Sep 21, 2023

சென்செக்ஸ் 66,230.24
-570.60sensex(-0.85%)
நிஃப்டி19,742.35
-159.05sensex(-0.80%)
USD
81.57
Exclusive

Erode News Live: பண்ணாரி அம்மன் குண்டம் விழாவில் ஐஏஎஸ் அதிகாரி செஞ்ச வேலைய பாருங்க

Nandhinipriya Ganeshan March 23, 2022 & 10:45 [IST]
Erode News Live: பண்ணாரி அம்மன் குண்டம் விழாவில் ஐஏஎஸ் அதிகாரி செஞ்ச வேலைய பாருங்கRepresentative Image.

Erode News Live: ஈரோடு சத்தியமங்கலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா நேற்று கோலாகலாம நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். கலந்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

பிரசித்தி பெற்ற கோயில்

ஈரோடு மாவட்டம் என்று சொன்னாலே ஒன்று பெரிய மாரியம்மன், மற்றொன்று சத்தியமங்கலத்தில் உள்ள அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயில்கள் தான் நினைவுக்கு வரும். சமயப்புரத்து மாரியம்மன், மேச்சேரி பத்ரகாளியம்மன் போன்ற பெரிய கோயில்களை போலவே ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலும் (Erode Periya Mariamman Kovil), சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலும்  (Sathyamangalam Bannari Amman Temple) மிகவும் பிரசித்தி பெற்றவை. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலின் குண்டம் விழா (Bannari Amman Gundam Festival) கடந்த 8 ஆம் தேதி காலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதையடுத்து, மார்ச் 22 அதாவது நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

பண்ணாரி அம்மன் குண்டம் விழா

Erode News Tamil: இக்கோயிலில் அதிகாலை 4.10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குண்டம் விழாவில் முதலில் பூசாரி குண்டத்தில் இறந்கினார். அவரை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா குண்டம் இறங்கினார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு நடக்கும் குண்டம் விழா என்பதால் அரசு அதிகார்கள், கல்லூரி மாணவ மாணவிகள், கைக்குழந்தையுடன் பெண்கள், திருநங்கைகள், வனத்துறையினர் என லட்சக்கணக்கான மக்கள் தீ மிதித்தனர்.

இவ்விழாவையடுத்தும், இன்று மார் 3 ஆம் தேதி இரவு புஷ்ப ரதமும், 24 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 25 ஆம் தேதி திருவிளக்கு பூஜையும் நடக்கும். அதன் பின்னர் மறுபூஜை 28 ஆம் தேதி நடத்தப்பட்டு திருவிழா முடிவடைகிறது.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்... 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்