Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Erode News Tamil: ஒரே நாளுல இத்தன ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசியா?

Nandhinipriya Ganeshan March 17, 2022 & 18:05 [IST]
Erode News Tamil: ஒரே நாளுல இத்தன ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசியா?Representative Image.

Erode News Tamil: கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து கடந்த ஆண்டு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. இது கொரோனா தொற்று வரமால் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் போடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் பாதிப்பு விகிதம் குறைந்து வந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக முதலில் 18-40 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

பின்பு, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சில மாதங்கள் கழித்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்ததந்த வயதுகேற்ப தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதற்கிடையில், உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 

Erode News Today: அதையடுத்து, 12 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக நேற்று முதல் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 15 - 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து நாலாயிரத்து 161 பேர் இருக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 85,601 சிறுவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. முதல் தவணை செலுத்தும் காலம் முடிந்து 28 நாட்கள் கடந்த மாணவ, மாணவிகளுக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இதேபோல், நேற்று முதல் 12 - 14 வயது சிறுவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி ஈரோடு மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 2 வது நாளாக இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. 

இதுபோன்ற ஈரோடு மாவட்ட செய்திகளை (Erode News Live) உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Search Around Web என்ற Tamil வலைத்தளப் பக்கத்தைத் தொடர்ந்திருங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்