Erode News Today : ஈரோடு மாவட்டத்தில் கிரீன்ஸ் கிளப் இரட்டையர் இறகுப் பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் நவீன் மற்றும் சித்தரஞ்சன் ஜோடி முதல் பரிசை வென்றுள்ளது.
ஆண்கள் இரட்டையர் இறகுப் பந்து போட்டி
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் கிரீன்ஸ் கிளப் சார்பில் இறகுப் பந்து போட்டி கடந்த மே 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இரட்டையர் பிரிவில் ஆண்களுக்கு மட்டும் இந்த போட்டித் தொடர் நடைபெற்றது.
லீக் சுற்று மற்றும் நாக் அவுட் சுற்றுகளுடன் நடத்தப்பட்ட இந்த போட்டியின் லீக் சுற்றில் பல அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றின் முடிவில் அரையிறுதியில் நவீன் மற்றும் சித்தரஞ்சன், மனோஜ் மற்றும் பாபு, ஸ்ரீராம் மற்றும் ஹரி, தீபன் மற்றும் ராஜா ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன.
வெற்றியாளர்கள்
அரையிறுதிக்குள் நுழைந்த 4 அணிகளில் நவீன் மற்றும் சித்தரஞ்சன், மனோஜ் மற்றும் பாபு ஜோடிகள் இறுதிச் சுற்றில் நுழைந்தது. இறுதியில் நவீன் மற்றும் சித்தரஞ்சன் ஜோடி முதல் பரிசை வென்றது. மனோஜ் மற்றும் பாபு இரண்டாம் பரிசையும், ஸ்ரீராம் மற்றும் ஹரி மூன்றாம் பரிசையும், தீபன் மற்றும் ராஜா நான்காம் பரிசையும் வென்றனர்.
முதல் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.7,000 பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. இதேபோல் இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.4,000 ரொக்கப்பரிசும் கோப்பையும், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 2,000 ரொக்கப்பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் 4வது பரிசு பெற்றவர்களுக்கு ரூ.1,000 ரொக்கப்பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது.
பரிசு வழங்கியவர்கள்
போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு கவுந்தப்பாடியில் உள்ள கிரீன்ஸ் கிளப் வழங்கியது. இரண்டாம் பரிசை கவுந்தப்பாடி நாலு ரோட்டில் உள்ள ஆதி பார்மஸியும், மூன்றாம் பரிசை பவானியில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனமான நிராமார்ட்டும் வழங்கின. கிரீன்ஸ் கலெக்ஷன் நான்காவது பரிசை வழங்கியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…