Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஈரோடு தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு மீண்டும் சீல் வைப்பு..!

madhankumar August 07, 2022 & 10:52 [IST]
ஈரோடு தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு மீண்டும் சீல் வைப்பு..!Representative Image.

ஈரோடு சிறுமியிடம் கரு முட்டை பெற்ற காரணத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு தமிழக அரசு கடந்த மாதம் 15 ஆம் தேதி சீல் வைத்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த மாதம் 27-ந்தேதி ஆஸ்பத்திரிக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது, இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் மருத்துவமனைக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நேற்று மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி தலைமையில் அதிகாரிகள் தனியார் ஆஸ்பத்திரியின் 10 ஸ்கேன் எந்திரங்களுக்கும், அவைகள் வைக்கப்பட்டுள்ள 4 அறைகளுக்கும் சீல் வைத்தனர்.

இதுகுறித்து மருத்துவ நலப்பணி அதிகாரி பிரேமகுமாரி கூறுகையில் இந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை வெளியேற்றுவதற்கு நேற்று (அதாவது நேற்று முன்தினம்) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் 46 நோயாளிகள் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 48 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் நாளை (அதாவது இன்று) மருத்துவமனைக்கு சீல் வைக்கும் பணி நடைபெறும் எனவும்  மேலும் ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் ஸ்கேன் மையங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்