Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

‘ராட்சசன்’ பட பாணியில் மாணவிகளிடம் அத்துமீறல்; பள்ளி தாளாளர் தலைமறைவு!

Editorial Desk Updated:
‘ராட்சசன்’ பட பாணியில் மாணவிகளிடம் அத்துமீறல்; பள்ளி தாளாளர் தலைமறைவு!Representative Image.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகேயுள்ள தனியார் பள்ளியின் தாளாளராக உள்ள வினோத் என்பவர், படிப்பில் சுமாராக உள்ள மாணவிகளுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறி பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் பெற்றோர்களை கொதிப்படைய வைத்துள்ளது. தொடர்ச்சியாக 12ம் வகுப்பு மாணவிகளிடம் வினோத் அத்துமீறிய வந்ததால், மாணவிகள் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளனர். இதனையடுத்து கடந்த புதன்கிழமை பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை போலீசார் அகற்ற முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

 

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ உள்ளிட்ட 4 சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். இதனையடுத்து பள்ளிக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தேர்வுகளும் ஒத்துவைக்கப்பட்டுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்