அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கோ. கண்டியன்கொல்லை கிராமத்தை சேர்ந்த தீபா (32) -ஆனந்தகுமார் (43) தம்பதியினருக்கு ஆதனா, அகல்யா ஆகிய 2 பெண் குழந்தைகளும், ஆதிஷ் என்ற 2 வயது ஆண் குழந்தை என 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தம்பதியினரின் 2 ஆவது மகளாகிய 8 வயதுடைய அகல்யாவிற்கு கடந்த ஆண்டு கிட்னி பிரச்னை ஏற்பட்ட நிலையில், சென்னை அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் கடந்த மே 30 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 15 நாட்களாக டயாலிசிஸ் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த்து. இதுபோன்று டயாலசிஸ் அளித்த பின்னர் மாலை 5 மணியளவில் அகல்யாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது தண்ணீர் தாகம் என கூறியதால், சிறுமியின் தாயார் தீபா அருகில் பாட்டிலில் இருந்த தண்ணீரை கொடுத்துள்ளார்.
இதனை உடனடியாக சிறுமி துப்பிய நிலையில் அருகில் இருந்த செவிலியர் அது தண்ணீர் அல்ல, நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஸ்பிரிட் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறுமி அகல்யாவை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த சோக நிகழ்வைத் தொடர்ந்து சிறுமியின் தயார் தீபா கூறுகையில், "டயாலிசிஸ் அறையில் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை வைத்திருந்ததன் காரணமாக அவசரத்தில் தண்ணீர் என நினைத்து கொடுத்தேன். ஆனால் எனது மகள் முழுமையாக குடிக்கவில்லை. இருந்தபோதிலும் உரிய சிகிச்சை அளிக்காத நிலையில் எனது மகள் இறந்து விட்டார். ஆனால் தற்போது மருத்துவர்கள் ஸ்பிரிட் குடித்ததன் காரணமாக தான் இருந்ததாக தெரிவிக்கின்றனர்" என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…