Fri ,Feb 23, 2024

சென்செக்ஸ் 73,089.69
-68.55sensex(-0.09%)
நிஃப்டி22,196.65
-20.80sensex(-0.09%)
USD
81.57
Exclusive

வாகன ஓட்டிகளே உஷார்.. போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை!!

Sekar August 20, 2022 & 18:21 [IST]
வாகன ஓட்டிகளே உஷார்.. போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை!!Representative Image.

வாகன ஓட்டிகள் இனி நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் நம்பர் பிளேட் இல்லாமல் அதிகளவில் வாகனங்கள் ஓடுவதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் 4 நாட்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையின் போது போலி நம்பர் பிளேட், நம்பர் பிளேட் இன்றி ஏராளமானோர் வாகனங்களை ஓட்டி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக 4 நாட்களில் மட்டும் 828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி நம்பர் பிளேட் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், போக்குவரத்து விதிகளை கடுமையாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் போலி நம்பர் பிளேட், நம்பர் பிளேட்டின்றி யாரேனும் வாகனங்கள் ஓட்டுவது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளதோடு, சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்