தேனி மாவட்டம், போடி அருகே தேவாரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மணிமாலா. இருவருக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகிறது. இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரமேஷ் மணிமாலா தம்பதியினருக்கு ஒரு மகன் மட்டும் உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிமாலா கணவரிடம் விவாகாரத்தும், ஜுவனாம்சமும் கேட்டு ஏற்கனவே போடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசா ரனையும் நடந்து வருகிறது.
இதனிடையே நேற்று சாட்சி சொல்வதற்காக போடி ஒருங்கிணைந்த நீதி மன்றத்திறகு வந்த மணிமாலா கூண்டில் ஏறி சாட்சி சொல்லி விட்டு மீண்டும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார். பின்னர் ஊருக்கு செல்வதற்காக கோர்ட் வாசலிருந்து போடி பஸ் நிலையத்திற்கு புறப்பட்டு சென்ற போது, வேகமாக வந்த ஒரு கார் மணிமாலா மீது மோதியுள்ளது. படுகாயத்துடன் உயிர் தப்பிய மணி மாலாவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர்.
போடி நகர போலீசார், தப்பியோட முயன்ற காரை மடக்கி, ஓட்டுநர் பாண்டித்துரையை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் கணவர் ரமேஷ் கூலிப்படையை வைத்து மனைவியை கொலை செய்ய முயற்சி செய்தாரா ? அல்லது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில், அங்கிருந்த பொதுமக்களே குற்றவாளியை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது ஆகும். இதனால் திங்களன்று மாலை போடி கோர்ட் வாசலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…