Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Karur district news in Tamil: பங்குனி உத்திரத்தையொட்டி இங்க வாங்க! இத பத்தி எத்தனை பேருக்கு தெரியும்?

Priyanka Hochumin March 16, 2022 & 16:50 [IST]
 Karur district news in Tamil: பங்குனி உத்திரத்தையொட்டி இங்க வாங்க! இத பத்தி எத்தனை பேருக்கு தெரியும்?Representative Image.

Karur district news in Tamil: கரூர் மாநகராட்சியில் இருக்கும் குளித்தலை பகுதியில் பங்குனி உத்திரத்தையொட்டி தெப்ப உற்சவம் நாளை மறுநாள் நடக்கிறது. 

Karur குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பெரும் விசேஷமாக இருக்கும். இந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு பங்குனி உத்திரத்தையொட்டி ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் இருந்து சாமி கொண்டுவரப்பட்டு இந்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த தெப்பக்குளத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் சுமார் 38 ஆண்டுக்குகளாக இந்த தெப்ப உற்சவம் நடத்தப்படவில்லை. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு தான் இந்த விசேஷ உற்சவம் நடத்தப்பட்டது. பிறகு கொரோனாவால் இந்த பண்டிகை நடைபெறுவது நிறுத்தப்பட்டது.

Karur News Today: அந்த வகையில் இந்த வருடம் எந்தவித தடைகளும் இன்றி இந்த உற்சவம் நடைபெற அத்தனை ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. குளத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க பல நாட்களாக தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெறுகிறது. மேலும் தெப்பக்குளத்தில் சுவாமி சுற்றிவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பிற்கு தெப்பக்குளத்தை சுற்றிலும் குச்சிகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது, இந்த வருடம் என்ன ஆனாலும் சரி தெப்ப உற்சவம் நடந்தே தீரும்.

Boating Festival: அப்படி என்ன சிறப்பு இந்த தெப்ப உற்சவத்தில் என்றால் இவ் விழாவின் போது அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலிலிருந்து உற்சவர் முக்கிய தடங்களை சுற்றி தெப்பக்குளத்தை வந்தடைவர். பிறகு அவருக்கு அபிஷேகம் செய்து வண்ண மலர்களை பயன்படுத்தி அழகாக அலங்கரித்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பிறகு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் மின்னொளியில் அமைந்திருந்த தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து மீண்டும் கரையை வந்தடைவார். . பக்தர்கள் அவரை தரிசனம் செய்த பிறகு, காலை மீண்டும் உற்சவருக்கு தீபாராதனை நடைபெற்று முக்கிய வீதி வழியாக அய்யர் மலைக்கு உற்சவர் செல்வார்.

இதுபோன்ற மேலும் பல கரூர் மாவட்டச் செய்திகளைப் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது search around web பேஸ்புக்  பக்கத்தை பின்தொடருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்