Karur District News: கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதியில் நடந்த தகராறு பற்றி பார்ப்போம்.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் மவுசு. அப்படி இருக்குறப்ப கரூர் மாவட்டத்துல அதுவும் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் என்ன பிரச்சனையாக இருக்கும். அந்த தொகுதியில் வெள்ளியணை கிராமத்திற்கு உட்பட்ட வடக்குமேட்டுப்பட்டி பகுதியில் விசேஷமான அருள்மிகு ஸ்ரீ மல்லையன் கோயில் அமைந்துள்ளது. இங்கு என்ன ஸ்பெஷல் என்றால், ஆண்டுதோறும் நடைபெறும் மாடு மாலை தாண்டும் திருவிழா தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதனை கண்டு ரசிக்க மக்கள் திரண்டு வருவார்கள்.
11 வருடமா நடந்த வழக்கு:
அப்படி இருக்கும் போது, 2010 ஆம் ஆண்டு மல்லையன் நாயக்கர் என்கிற பெருமாள் தகராறு செய்ய ஆரம்பித்தார். என்னவென்றால் தான் மட்டும் திருவிழாவை நடத்த வேண்டும் என்று வம்பிழுக்க பிரச்சனை காவல் துறை வரை சென்று. இதனால் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கான தீர்ப்பு 2021 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி வழங்கப்பட்டது, தனி ஒரு நபருக்காக இந்த மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடத்த முடியாது. அது அந்த ஊரில் வசிக்கும் அணைத்து குடும்பங்களுக்கு உண்டான உரிமை என்று கூறி வழக்கை செய்தனர்.
இவன என்ன பண்ணலாம்:
பேசாமல் இருக்காம, அவர் மீண்டும் இந்த மாதம் 11 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார், அதனை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் மார்ச் 14 ஆம் தேதி கரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே அலுவலகத்தில் கூடிய மக்கள் குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே காவல்துறையும், வருவாய்த் துறையும் துணை போவதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் அந்த ஊர் மக்கள் சாலையில் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். தாந்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.ரகுநாதன், முன்னாள் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆர்.ராமசாமி சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களோ நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
பிறகு வெள்ளியணை பஞ்சாயத்து தலைவரும், திமுக நிர்வாகியுமான சுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் எம்.ரகுநாதன், ஆர்.ராமசாமி ஆகியோர் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவுகளை மதிக்காமல் கரூர் திமுகவினர் செயல்படுவதாக மக்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். கரூர் மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த விமர்சனத்திற்கு என்ன செய்ய போகிறார்? அந்த ஊர் மக்களுக்கு நீதி கிடைக்குமா?
இதுபோன்ற மேலும் பல கரூர் மாவட்டச் செய்திகளைப் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது search around web பேஸ்புக் பக்கத்தை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…