Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

Kodiveri  Waterfalls | கொடிவேரியில் ஆரம்பமாச்சு  கோடைக் கொண்டாட்டம்!

Manoj Krishnamoorthi March 14, 2022 & 12:30 [IST]
Kodiveri  Waterfalls | கொடிவேரியில் ஆரம்பமாச்சு  கோடைக் கொண்டாட்டம்!Representative Image.

கோடைக் காலமென்றாலே கொண்டாட்டம் தான், பள்ளி பருவத்தினரோ இளம் வயதினரோ முதியவர்களோ யாராக இருந்தாலும்  விடுமுறை தினத்தில் சுற்றுலா செல்ல விரும்புவோம். நம் மனதைக் குதூகலமாக்கும் தருணம் சுற்றுலா, கோடைக்கு இதமாகக் குளிர்ந்த  அருவியில் குளிப்பது அனைவருக்குமே கொண்டாட்டம் ஆகும். அருவி என்றவுடன் குற்றாலம் தான் நம் அறிவுக்கு எட்டும், ஆனால் அதே போன்ற இயற்கை அழகு கொஞ்சும் அருவி ஈரோட்டில் கோபி அருகே பவானி  ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையிலிருந்து கொட்டும்  கொடிவேரி அருவி ஆகும்,  இந்த  அருவியில் குளிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வருவார்கள்.

கொரோனா காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வீட்டிலே அடைந்து இருந்தனர், இந்த வருடம் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் கொடிவேரி அணையில் நீராடுவதற்குக் கோபி, சத்தியமங்கலம், பவானி, நாமக்கல், சேலம், திருப்பூர் போன்ற ஊர்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

கோடையின் தொடக்கத்தில் ஏராளமான சுற்றுலா வாசிகளின் வருகை வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அருவியில் நீரின்  அளவு குறைவாக இருந்தாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அருவியில் மக்கள் வருகை அதிகமாக இருந்தது

.

இங்குக் கிடைக்கும் மிகவும்  சுவையான  மீன்களைச் சுற்றுலா வாசிகள் ஆர்வமாகச் சாப்பிட்டு மகிழ்ந்தனர். அமைதியான சூழல் பறவைகளின் சத்தம் நம் மனதுக்கு நிம்மதியை  அளிக்கும்.  ஒரு முறை  வந்தால் மீண்டும் வரத்தூண்டும் அளவிற்கு இயற்கை அழகு நிரம்பிய ஒரு சுற்றுலா தளமாகும். பவானி ஆற்றின் குறுக்கே அமைந்த அணை மிகவும் அகலமாகச்  சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பான சிறந்த சுற்றுலா தளம் கொடிவேரியாகும். இந்த அணையில் குறைந்தபட்சம் 70 பேர் ஒரே நேரத்தில் குளிக்கும் அளவு வசதியான அருவியாகும். மிகவும் குறைந்த நுழைவு கட்டணம் , சுத்தமான கழிப்பறை, உடை மாற்றும் அறை, பார்கிங் வசதி என அனைத்து வசதியும் இங்கு உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சிக்காக உயர்ந்த பாதுகாப்புடன் கூடிய படகு சவாரியும் உள்ளது. கொடிவேரியில் இருந்து சுமார் 30 கி.மி தொலைவில் பவானி சாகர் அணை அமைந்துள்ளது.  கொடிவேரியில் குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காவும் உள்ளது.  குடும்பத்துடன்  கோடைக்காலத்தைச்  சந்தோஷமாகச் செலவிட கொடிவேரி ஒரு சிறந்த இடமாகும்.

இதுபோன்ற மேலும் தினசரி இராசிபலன் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது search around web  பக்கத்தைப் பின்தொடருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்