பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக தேனி மாவட்டம் சின்னமனுரில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இளைஞர்களின் நலன் காக்கும் வகையிலும் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது இது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பல்வேறு சமயங்களில் விசாரணைக்கு சென்று விடும் நேரத்தில் புகார் அளிக்கவரும் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சமீப காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வருகின்றன, இதில் சிக்கி இளைஞர்கள் தங்கள் வாழ்வை நாசமாக்கி கொள்ளாமல் இருக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் அனைத்து விதமான நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல அறிய வகை நூல்களும் இங்கு உள்ளது. நாள்தோறும் இந்த நூலகம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் மற்றும் சப்இன்ஸ்பெக்டர், போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…