மதுரை: மெட்ரோ ரயில் பணிகள் கோவிலை பாதிக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் நடைபெற உள்ள மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக, அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமை செயலர், ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் சித்திக் உட்பட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் மேற்கொள்ளப்பட உள்ள மெட்ரோ ரயில் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மத்திய தொல்லியல் துறை, மாநில இந்து அறநிலைய துறை, விதிகள் மீறாமல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, மீனாட்சி அம்மன் கோவிலின், சுற்றுச்சுவரில் இருந்து 115 மீ தொலைவிலும், திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து 160 மீ தொலைவிலும், சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.மெட்ரோ பணிகளின்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…