Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல நொறுங்கிய கார்… கோர விபத்தில் 3 பேர் பலி…

Gowthami Subramani October 18, 2022 & 11:40 [IST]
தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல நொறுங்கிய கார்… கோர விபத்தில் 3 பேர் பலி…Representative Image.

சென்னை அருகே நடந்த கோர விபத்தில் அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சகோதரர்கள் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு ஆகியோர். இவர்கள் இருவருமே அதிமுக பிரமுகர்கள். இவர்களுக்குச் சொந்தமாக ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரம் உள்ளது. இந்த நிலையில், பழுதடைந்த அந்த வாகனங்கலை தங்களது சொந்த ஊரில் இருந்து மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு சென்று நேற்று வாகனத்தை சரி செய்து விட்டு ஊருக்குச் செல்ல திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இதில், அந்த வாகனத்தில் 5 பேர் வந்துள்ளனர். அப்போது, வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையோர தடுப்பில் மோதி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது.

இதில், பள்ளத்தில் விழுந்த அந்த கார் நொறுங்கியுள்ளது. இதில் காரில் பயணம் செய்த சுதாகர், சுரேஷ் பாபு, ரமேஷ் பாபு உள்ளிட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இதில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்து குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்