ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சிங்காநல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 34). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது. கிருஷ்ணமூர்த்தி கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைகாரன் கோவிலில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் அவ்வப்போது செல்போனில் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
கிருஷ்ணமூர்த்தில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் ரம்மி விளையாட்டில் ரூ.5 லட்சத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனை அடைந்த கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்த அவர் தோட்டத்துக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். தோட்டத்திற்கு சென்றதும் தற்கொலை செய்துகொள்ள முடிசெய்து, அங்கிருக்கும் மரம் ஒன்றில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர் அலறியடித்து ஓடிச்சென்று கிருஷ்ணமூர்த்தியை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இச்சம்பவம் குறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…