Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

சென்னையை உலுக்கிய சம்பவம்.. வாட்ஸ்அப்பில் மனைவிக்கு சொல்லிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவன்... பகீர் காரணம்..

Nandhinipriya Ganeshan Updated:
சென்னையை உலுக்கிய சம்பவம்.. வாட்ஸ்அப்பில் மனைவிக்கு சொல்லிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவன்... பகீர் காரணம்..Representative Image.

சென்னை அயனாவரத்தில் உள்ள விடுதியில், மனைவிக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி பகுதியை சேர்ந்த கணேசன். இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பின்னர் மனைவியுடன் வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணேசனுக்கு காசநோய் இருப்பது தெரியவந்தது.

இதனிடையே, திடீரென அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள விடுதிக்கு சென்று, அறை எடுத்து தங்கியிருந்த கணேசன், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது மனைவிக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, உடனே அந்த விடுதிக்கு சென்றுள்ளார்.

ஆனால், அதற்குள் கணேசன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனக்கு காசநோய் இருப்பதை அறிந்த கணசன் மனமுடைந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்