Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

கோவில் கிடா விருந்தில் துப்பாக்கிச் சூடு... மதுரையில் பரபரப்பு... 

Nandhinipriya Ganeshan November 14, 2022 & 11:21 [IST]
கோவில் கிடா விருந்தில் துப்பாக்கிச் சூடு... மதுரையில் பரபரப்பு... Representative Image.

மதுரை திருமங்கலம் அருகே காட்டு பத்திரகாளியம்மன் கோவில் பின்புறம் அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தனசேகரன் என்பவர் நேர்த்திக் கடனுக்காக கிடாய் வெட்டி விருந்து வைத்துள்ளார். இதற்காக பழக்கமான நண்பர்களையும் அழைத்துள்ளார்.

இந்த நிலையில், விருந்திற்கு வந்த மதுரையை சேர்ந்த வேதகிரி என்பவருக்கும் குருட்டு கணபதி என்பவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த வேதகிரி தன் காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட அங்கிருந்துவர்கள் அலறி அடைத்து ஓடிவிட்டனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காட்டு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு விரைந்து வந்த திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் விருந்து வைத்த தனசேகரன் மற்றும் சக்திவேல் என்பவரிடம் விசாரணை மேற்க்கொண்டனர்.

இந்த விசாரணையின் போது முன்விரோதம் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரியவந்தது. மேலும், தப்பி ஓடிய வேதகிரி மற்றும் கணபதியை தேடி வருகின்றனர். விருந்துக்கு வந்த இடத்தில் வாய் தகராறு துப்பாக்கி வரைக்கும் போனதால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்