Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Meenakshi Amman Temple Latest News In Tamil : மீனாட்சி அம்மன் கோவிலில் குவியும் பக்தர்கள்... 20 ஆயிரம் லட்டு தயாரிக்க புதிய எந்திரம்...

Muthu Kumar [IST]
Meenakshi Amman Temple Latest News In Tamil : மீனாட்சி அம்மன் கோவிலில் குவியும் பக்தர்கள்...  20 ஆயிரம் லட்டு தயாரிக்க புதிய எந்திரம்...Representative Image.

Meenakshi Amman Temple Latest News In Tamil : சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மேலும் 20 ஆயிரம் பேருக்கு லட்டு தயாரிக்கும் வகையில் புதிய எந்திரம் நிறுவப்பட்டு உள்ளது.

மீனாட்சி கோவிலில் லட்டு பிரசாதம்

2019ம் ஆண்டு முதல் மீனாட்சி அம்மன் கோவிலில், திருப்பதி கோவிலை போன்று பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் இலவசமாக தினமும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்றன. வேகமாக லட்டு தயாரிக்கும் எந்திரங்கள் வடமாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டது. அந்த எந்திரத்தின் மதிப்பு சுமார் ரூ.4½ லட்சம் ஆகும். அதன் மூலம் தினமும் ஒரு மணி நேரத்தில் சுமார் 30 கிராம் எடை கொண்ட 2,400 முதல் 3 ஆயிரம் லட்டுகளை 15 பேர் கொண்ட குழுவினர் தயாரித்து வருகிறார்கள். இந்த எந்திரம் கோவிலின் தெற்காடிவீதி யானைமகால் அருகே உள்ள இடத்தில் நிறுவப்பட்டு லட்டு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதுதொடர்பாக கோவில் நிர்வாகிகள் கூறுகையில், ஒரு மணி நேரத்துக்கு 30 கிராம் எடை கொண்ட 2,400 லட்டுகளை 15 பேர் கொண்ட குழுவினர் தயாரித்து வருகின்றனர். அவர்கள் தினமும் 20 ஆயிரம் லட்டுகளை தயார் செய்வார்கள். மீனாட்சி அம்மனை தரிசித்து வரும் பக்தர்களுக்கு அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் லட்டுகள் வினியோகம் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3 மடங்காக உயர்ந்துள்ளது. எனவே அனைவரும் இலவச லட்டு பிரசாதம் வழங்கவும், அதன் உற்பத்தியை அதிகரிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதை தொடர்ந்து கூடுதலாக ஒரு லட்டு தயாரிப்பு எந்திரத்தை குஜராத் மாநிலத்தில் இருந்து ரூ.4½ லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டது. அந்த எந்திரமும் தற்போது நிறுவப்பட்டு அதன் மூலம் நேற்று முதல் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது. இதனை கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தொடங்கி வைத்தார். 

சித்திரை திருவிழாவால் கோவிலுக்கு வரும் சுமார் 40 ஆயிரம் பக்தர்களுக்கான லட்டுகளை தற்போது கோவில் நிர்வாகம் தயாரித்து வழங்கி வருகிறது. இதன் மூலம் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் லட்டு பிரசாதம் கிடைப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்