தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னையிலிருந்து ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 250 பேருந்துகள் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது.
தீபாவளித் திருநாள் வந்தாலே, சென்னை மாநகரிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், அங்குள்ள இடங்களுக்கும் செல்ல விரும்புபவர்கள் பேருந்து, ரயில் டிக்கெட்களுக்காக அல்லோலப்படுகிறார்கள். அதனை சரிகட்டும் வகையில் பல பேருந்துகளை இயக்கி நிலைமையை சமாளிக்கிறது தமிழக அரசு.
ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்ட நிலையில், ஆம்னி பேருந்துகளின் கொள்ளை விலையிலிருந்து தப்பித்து நின்று கொண்டே சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கும் திருநெல்வேலிக்கும் பயணிக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மனதில் பால்வார்த்த வண்ணம் இப்போது கூடுதலாக 250 பேருந்துகளுடன் சேர்த்து மொத்தம் 2350 பேருந்துகள் இன்று வெளியூருக்கு புறப்பட்டு செல்கின்றன. மாலை 4 மணி தொடங்கி இரவு 12 மணி வரையிலும் இதற்கான பேருந்துகளில் மக்கள் பயணிக்க முடியும்.
வழக்கமான கட்டணங்களே வசூலிப்பதாக அரசு கூறியிருந்தாலும், விரைவு பேருந்துக்கான கட்டணமே வசூலிக்கப்படுவது வழக்கம். இந்த முறை எப்படி வசூலிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…