Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
0.00sensex(0.00%)
நிஃப்டி21,995.85
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

Namakkal News Today : நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை பல மடங்கு உயர்வு.. காரணம் என்ன?

Sekar April 15, 2022 & 17:33 [IST]
Namakkal News Today : நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை பல மடங்கு உயர்வு.. காரணம் என்ன?Representative Image.

Namakkal News Today : நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்பிலான மதுபான விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் மூடல்

வழக்கமாக பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விஷேஷ நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.

கோடிக்கணக்கில் வருமானம்

டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாகா இருந்தால், நமது "குடிமகன்கள்" முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்வது வழக்கம். இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் தினங்களுக்கு முந்தைய தினங்களில் மதுவிற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

ஏப்ரல் 14 ஆம் தேதியான நேற்று கடைகள் அடைக்கப்பட்டதால், ஏப்ரல் 13 ஆம் தேதி மதுவிற்பனை அதிகரித்தது. நாமக்கல் மாவட்டத்தில் 189 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ள நிலையில், இந்த கடைகளில் வழக்கமாக தினசரி ரூ.1.5 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும்.

ஆனால் நேற்றுக்கு முந்தைய தினம் ரூ.5 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்