Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

எங்கள மறந்துட்டீங்களே -  தாராசுரம் மக்கள் ஆதங்கம்! 

Kanimozhi Updated:
எங்கள மறந்துட்டீங்களே -  தாராசுரம் மக்கள் ஆதங்கம்! Representative Image.

யுனெஸ்கோ அமைப்பின் உலக கலாச்சார பாரம்பரிய மரபுச் சின்னங்களில் ஒன்றான தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் ஒரு வார காலத்திற்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ள  மின்விளக்கு அமைப்புகளை நிரந்தரமாக அமைத்திட வேண்டுமென சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

யுனெஸ்கோ அமைப்பின் உலக கலாச்சார பாரம்பரிய மரபு சின்னங்களில் ஒன்றாக கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் தேர்வு செய்யப்பட்டு அதனை மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை பராமரித்து வருகிறது.

 900 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் இராஜராஜனால்கட்டப்பட்ட இவ்வாலயம் சோழர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. உயிரோட்டம் உள்ள சோழர்களின் இந்த நினைவுச் சின்னத்தை காண பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய இடங்களில் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாக விளங்குகிறது.  ஜி 20 அமைப்பு நாடுகளுக்கு இந்தியா தலைமை பொறுப்பு ஏற்றதை கொண்டாடும் வகையில் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் ஒரு வார காலத்திற்கு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இரவில், மின் ஒளியில் கருங்கல்லால் ஆன கோவில்  பொற்கோவிலை போல் காட்சியளிக்கிறது.  ஒரு வார காலத்திற்கு மட்டும் ஏற்பாடு செய்துள்ள மின்விளக்கு அலங்காரத்தை ஆண்டு முழுவதும் நிரந்தரமாக , செய்திட வேண்டும் என சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்