Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Erode latest news : பிளஸ்-2 மாணவர் தற்கொலை..! காரணம் என்ன..?

Muthu Kumar June 02, 2022 & 17:28 [IST]
Erode latest news : பிளஸ்-2 மாணவர் தற்கொலை..! காரணம் என்ன..?Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்டத்தில் செல்போனில் கேம் விளையாடிய பிளஸ்-2 மாணவர் விஷம் மன அழுத்தத்தால் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே மணக்காடுபுதூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மனைவி வெண்ணிலா என்ற தம்பதிகளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் அப்பகுதியில் செயல்பட்டு வருக்ம் தனியார் மில்லில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் அவரது மகன் ஹரிபிரகாஷ் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்து வரும் நிலையில் அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் விளையாடி வந்துள்ளார். 

இதன் காரணமாக ஹரிபிரகாஷ் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரவியை தொடர்பு கொண்ட ஹரி பிரகாஷ் வீட்டின் சாவி கேட்டுள்ளார். பின்னர் ரவி வேலை செய்யும் இடத்திற்க்கு சென்ற ஹரி பிரகாஷ் சாவியை வாங்கி சென்றுள்ளார். 

இதனையடுத்து, நேற்று மதியம் உணவு எடுத்துக்கொள்ள வீட்டுக்கு வந்த ரவியிடம் ஹரி பிரகாஷ் நண்பர்கள் வேகமாக ஓடி வந்து மகன் ஹரி பிரகாஷ் விஷம் குடித்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். 

இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த ரவி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து மகனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஹரி பிரகாஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மலையம்பாளையம் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தனர். இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் மாணவர் ஹரி பிரகாஷ் அடிக்கடி செல்போனில் வீடியோகேம் விளையாயதால் மன அழுத்தத்திற்கு தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, தற்கொலைக்கு இது தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து மலையம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்