மதுரை மத்திய சிறையில் பணியில் இருக்கும் போதே காவலர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மதுரை மத்திய சிறையில் காவலராக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்(40) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து சிறைத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
மதுரை மத்திய சிறையில் இன்று பணியில் இருந்த பொழுது மாலை மணியளவில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சக காவலர்கள் சரவணனை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் காவலர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…