Sun ,Sep 24, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

Virudhunagar News Today : பொதுமக்கள் சாலை மறியல்..?

Muthu Kumar May 02, 2022 & 20:23 [IST]
Virudhunagar News Today :  பொதுமக்கள் சாலை மறியல்..?Representative Image.

கிராமசபை கூட்டம் 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை ஓன்றியம் பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி துறை சார்பில் ஊர் நல அலுவலர் திராவிடசெல்வி கலந்து கொண்டார். 

இந்த கூட்டத்தில் பாளையம்பட்டி மற்றும் விரிவாக்க பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர். அதன்படி, ஊராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லை எனவும், குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை வீதிகளில் சாக்கடை நீர் செல்வதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை 

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் விரைந்து வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் காஜாமைதீன் பந்தேநவாஸ் கிராமசபை கூட்டத்தில் நேரில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்