சேலம் கோட்டை பகுதியில் ஹபீப் தெருவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பழைய புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட பல்வேறு பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்கு வந்து புத்தகம் வாங்குவது வழக்கம். இப்படி இருந்த நிலையில் திடீரென முளைத்தது ஒரு பிரச்சனை? குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டம் இது பற்றி அறிய எங்கள் பதிவை மேலும் பின்தொடரவும்.
சேலத்தில் பிச்சை எடுத்து புத்தக வியாபாரிகள் போராட்டம்!
சேலம் கோட்டை பகுதியில் 40 ஆண்டுகளாக பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள் உள்ளது. இந்நிலையில் 14 கடைகள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்துவதால் கடந்த மே மாதம் மாநகராட்சி சார்பில் கோட்டை பகுதி சேர்ந்த ஒரு அமைப்பின் புகார் அடிப்படையில் அகற்றப்பட்டது.
40 ஆண்டுகளாக பழைய புத்தங்களை விற்பனை செய்து வரும் வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கடை வைக்க அனுமதி அளிக்க மாவட்ட ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை பலரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் குடும்பத்துடன் சேலம் மாநகராட்சி அலுவலகத்தின் முன் குடும்பத்துடன் போராட்டம் செய்துள்ளனர்.
சேலம் கோட்டை பகுதியில் கடை வைக்க அனுமதி அளிக்கவில்லை தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும் என்ற கருத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். பழைய புத்தகங்கள் வைத்து வருமானம் ஈட்டும் எங்களுக்கு கடை வைக்க அனுமதி இல்லை என்றால் தாங்கள் பிச்சை தான் எடுக்க வேண்டும் என்று குடும்பத்துடன் வந்து கோஷமிட்டது பரபரப்பை எழுப்பி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…