Fri ,Mar 24, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

செத்து போனு சொல்லி தான் தள்ளி விட்டேன்…. சத்யா இறந்ததே தெரியாது.. சதீஷ் அளித்த பரபரப்பு வாக்குமூலம்

Gowthami Subramani October 28, 2022 & 15:10 [IST]
செத்து போனு சொல்லி தான் தள்ளி விட்டேன்…. சத்யா இறந்ததே தெரியாது.. சதீஷ் அளித்த பரபரப்பு வாக்குமூலம்Representative Image.

ஒட்டு மொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்த பரங்கிமலை சத்யாவின் கொலையும், அவரது தந்தையின் அதிர்ச்சி மரணமும் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரு தலைக் காதலால், ஏற்பட்ட விளைவால், சத்யாவுக்கும் சதீஸ்க்கும் இடையே பிரிவு ஏற்பட, ரயில்வே ஸ்டேஷனிலேயே வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இதில், சதீஷ் மின்சார ரயில் வரும் சமயத்தில், சத்யாவை எட்டி உதைத்தார். இதில், சத்யாவின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது. மகள் இறந்த துக்கத்தால், சத்யாவின் தந்தையான மாணிக்கமும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே தப்பிச் சென்ற சதீஸை போலீசார் கைது செய்தனர்.

சத்யாவுக்கு 14 வயது இருக்கும் போதே, அவரைக் காதலித்து வந்துள்ளார் சதீஷ். இந்நிலையில், அவரது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்யாவிடம், பலமுறை சண்டை போட்டு, சத்யாவின் கல்லூரி வாசலிலேயே முடியை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சதீஷிடம் கைநிறைய பணம் புழங்கி வந்ததுடன், பெற்றோர்களும் அவனைக் கண்டிக்காமல் விட்டுள்ளனர். இது கடைசியில் போதை பழக்கம் வரை கொண்டு போய் நிறுத்தியுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு கூட சத்யாவுக்கு லவ் டார்ச்சர் தந்து ஒரு சைக்கோவைப் போல நடந்துள்ளார்.

அதற்கும் மேல், இவர் சத்யாவை திட்டமிட்டே கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் படி, 10 நாள்கள் சத்யாவைப் பின் தொடர்ந்ததாகவும், கடைசியில் கொன்றதாகவும் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். சதீஷை போலீஸ் காவலில் வைத்து விசாரித்த போது பல விஷயங்கள் வெளிவந்துள்ளன. இதில், சம்பவத்தன்று சத்யா தனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கையில் சதீஷ் தூரமாக நின்று சத்யாவை நோட்டமிட்டு வந்துள்ளார். செல்போனில் பேசுவதைப் போல தூரமாக நின்று கொண்டு சத்யாவை கண்காணித்து கொண்டே இருந்துள்ளார்.

பிறகு ரயில் வரும் நேரம் பார்த்து, சத்யாவுடன் பேசிக் கொண்டே, செத்து போ என சொல்லிக் கொண்டே சத்யாவை தள்ளி விட்டிருக்கிறார். இது குறித்து சதீஷ் வாக்குமூலம் கொடுத்ததாவது,”என்னுடைய அறை முழுக்க சத்யா.. சத்யா.. என்று பெயர் எழுதி வைத்திருக்கிறேன். நான் படிக்கவில்லை. ஒழுங்காக வேலைக்குச் செல்லவில்லை என்பதற்காக சத்யா ஒரு நாளும் என் மீது கோபப்பட்டது கிடையாது.

என்னுடன் பழகுவது சத்யாவின் தாயாருக்குப் பிடிக்காது. இதனால், வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து விட்டார். அதனால் என்னிடம் சத்யா பேசுவதை நிறுத்தி விட்டால். தொடர்ந்து பல முறை முயற்சித்தும் என்னுடன் பேசாமல் இருந்ததால், ஆத்திரத்தில் தான் ரயில் முன்பு தள்ளிவிட்டே. ஆனால், சத்யா இறந்து விடுவார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. ரயில் முன்பு தள்ளி விட்டதா காயமடைந்திருப்பார் என்று தான் நினைத்தேன். சத்யா இறந்து விட்ட விஷயமே எனக்கு தெரியாது” என்று கூறியிருக்கிறான்.

இதனையடுத்து, சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று, கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டச் செய்து போலீசார் வீடியோவாகப் பதிவு செய்தனர். மேலும், சதீஷ் அளித்த வாக்குமூலத்தையும் பதிவு செய்து கொண்டு புழல் சிறையில் அடைத்தனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்