Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Scholarship Schemes in Erode: படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது…? ஈரோடு கலெக்டர் அறிவித்த தகவல்…!

Gowthami Subramani July 10, 2022 & 13:45 [IST]
Scholarship Schemes in Erode: படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது…? ஈரோடு கலெக்டர் அறிவித்த தகவல்…!Representative Image.

Scholarship Schemes in Erode: ஈரோட்டில் படித்த வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்த அறிவிப்பின் படி, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாக, படித்து முடித்து வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவும் வகையில் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன் படி, இந்த திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி, +2 படிப்பு மற்றும் பட்டதாரிகளுக்கு குறிப்பிட்ட அளவிலான தொகை வழங்கப்பட்டு வருகிறது.

உதவித்தொகை

கொரோனா சூழ்நிலையின் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால், நடுத்தர மக்கள் உட்பட ஏராளக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் படி, ஈரோட்டில் படித்து வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை திட்டம் அவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதன் படி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் ரூ.200-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.300-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி முடித்தவர்களுக்கு ரூ.600 உதவித்தொகையாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை

இந்த திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கு SSLC மற்றும் அதற்கு கீழ் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.600, SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, மற்றும் பட்டதாரிபடிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,000-ம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த திட்டத்தின் கீழ், வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடையக்கூடிய காலாண்டிற்கு தகுதியுடைய படித்த வேலைப்பற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

மேலே கூறப்பட்ட திட்டத்தின் கீழ், உதவித் தொகை பெற விரும்பும் நபர்கள் 30.06.2022 ஆம் நாளின் படி, SC, ST பிரிவினர் 45 வயதும், இதர பிரிவினர் 40 வயதுக்கும் அதிகமாக இருத்தல் கூடாது. மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் கண்டிப்பாக ஆண்டிற்கு ரூ.72,000 தொகைக்குள் இருத்தல் வேண்டும்.

படித்துக் கொண்டிருக்கும் நபர்கள் இதில் விண்ணப்பிக்கக் கூடாது. மேலும், விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். சுய வேலைவாய்ப்பு செய்து கொண்டிருப்பவர்களாக இருக்கக் கூடாது.

திட்டத்தின் விதிகள்

இத்திட்டத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பள்ளி, கல்லூரி கல்வியை முழுமையாக தமிழ்நாட்டில் படித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர், பாதுகாவலர் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்திருப்பவராக இருக்க வேண்டும்.

வேறு எந்தவொரு நிதி உதவியும் பெறாதவர்கள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்

இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் கீழ்க்காணும் ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும்.

  • தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம்
  • ஆதார் கார்டு
  • ரேஷன் கார்டு
  • அனைத்து கல்விச் சான்றிதழ்கள்

மேலே கூறப்பட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

உதவித்தொகை பெறுவது எப்படி?

இந்த திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித் தொகை பெறுவதற்கு கீழ்க்காணும் முறைகளில் விண்ணப்பிக்கலாம்.

படித்த வேலைவாய்ப்பற்ற நபர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித் தொகை பெற, எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத நபர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியுடன் கூடிய நபர்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினைத் தொடர்ந்து புதுப்பிருப்பவராக இருக்க வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 வருடம் முடித்திருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ், ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் நபர்கள் (பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள்) வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு சுய உறுதி சான்றிதழை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்