Erode latest news : ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு கவுசிகா, ஹர்சிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவரது இரண்டு மகள்களும் மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் பாலகிருஷ்ணன் தனது உறவினர்கள் திருமணத்துக்காக நாமக்கல் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பாலகிருஷ்ணனின் மகள் ஹர்சிதா இரவு 7 மணிக்கு அவருக்கு தொடர்புகொண்டு கவுசிகாவை காணவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பாலகிருஷ்ணன் உடனடியாக வீட்டிற்க்கு வந்து அக்கம்பக்கத்தில் கவுசிகாவை தேடியுள்ளார். இதனையடுத்து, எவ்வளவு தேடியும் தனது மகள் கிடைக்காததால் மொடக்குறிச்சி காவல்நிலையத்தில் தனது மகளை கண்டு பிடித்து தருமாறு புகாரளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவி கவுசிகாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…