Tue ,Sep 26, 2023

சென்செக்ஸ் 66,023.69
14.54sensex(0.02%)
நிஃப்டி19,674.55
0.30sensex(0.00%)
USD
81.57
Exclusive

இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. எட்டாம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை.. சென்னையில் பகீர்!!

Sekar Updated:
இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. எட்டாம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை.. சென்னையில் பகீர்!!Representative Image.

சென்னையில் இன்ஸ்டாகிராமில் தோழியாக பழகிய எட்டாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 22 ஆம் தேதி தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிறுமி மகாபலிபுரத்தில் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் மகாபலிபுரத்துக்கு சென்று, அங்குள்ள அனைத்து விடுதிகளிலும் சல்லடை போட்டு சோதனை நடத்தியதில் சிறுமி கண்டறியப்பட்டார். போலீசாரை பார்த்ததும் சிறுமியுடன் இருந்த இளைஞன் தப்பிக்க முயற்சி செய்த நிலையில், போலீசார் அவனை விரட்டிப் பிடித்தனர்.

பின்னர், காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், இளைஞன் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த 24 வயதான துளசிதரன் என்பது தெரியவந்தது. மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் சிறுமிக்கு காதல் ஆசை காட்டி ஏமாற்றியுள்ளான். 

இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி சிறுமியை மகாபலிபுரம் அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து துளசிதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்