ஆட்டு பட்டியில் இரவில் ஆட்டைத் திருடி செல்வது பல காலமாக பல்வேறு இடங்களில் நடப்பதாகும். இந்த திருட்டு சம்பவம் பல முறை கண்டு பிடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்தாலும் ஒரு சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான முடிவு என்னவென்றால் திருடர்களாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் தான் ஞாபகம் வரும். ஆட்டு கொட்டகையில் இருந்து செம்மறி ஆடு திருட சென்று மாட்டிய இருவர் பற்றி இவ்வாசகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
செம்மறி ஆடு திருட்டும்..! மாட்டி கொண்ட திருடனும்..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடிங்கியம் ஊராட்சி வல்ல குண்டபுரம் ராஜேந்திரன் என்பவர் வீட்டில் தான் இந்த திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவர் வீட்டின் முன் ஆட்டு கொட்டகை அமைத்து சில செம்மறி ஆடுகள் வளர்ந்து வந்துள்ளார், அதில் 14,000 மதிப்புள்ள 2 செம்மறி ஆடுகள் திருடப்பட்டன என தளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரின் ஆடுகளை செல்வராஜ் மற்றும் சிவக்குமார் என்ற இரு நபர்கள் திருடியது தெரிய வந்துள்ளது, பின்னர் செம்மறி ஆடுகளை திருடிய இருவரையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர், திருடப்பட்ட 2 ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…