Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வேளாண் பல்கலைக்கழங்களுக்கு இடையே விளையாட்டு போட்டி; முதல் மூன்று இடங்களை பிடித்தது யார்?

Kanimozhi Updated:
வேளாண் பல்கலைக்கழங்களுக்கு இடையே விளையாட்டு போட்டி; முதல் மூன்று இடங்களை பிடித்தது யார்?Representative Image.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று மதுரை தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி அணி முதலிடத்தையும், பெரியகுளம் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இரண்டாம் இடத்தையும் பெற்றது. 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளை  கோவை, தஞ்சாவூர், பெரியகுளம், கிள்ளிகுளம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு  மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.


இதில் பி பிரிவு மண்டலத்தில்  தேனி,  மதுரை, கரூர், திண்டுக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி  உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகளைச் சேர்ந்த 12 உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் 1200  மாணவ மாணவியர் பங்கேற்றனர். 

இந்த விளையாட்டு போட்டிகளானது பெரியகுளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் கடந்த  2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது.

இதில் குழு விளையாட்டு போட்டிகளான கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கபடி, இறகு பந்து,எறிபந்து மற்றும் தனிநபர் விளையாட்டு போட்டிகளான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர்,5000மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் என அனைத்து விளையாட்டு போட்டிகளும் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. 

இறுதி நாளான இன்று விளையாட்டுப் போட்டிகள் முடிவுற்ற நிலையில், வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர் மாணவியருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராஜாங்கம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.


மண்டல அளவில் ஐந்து நாட்கள் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மதுரை தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழக கல்லூரி அணி 173 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தையும் 92 புள்ளிகளை பெற்ற பெரியகுளம் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

மண்டல அளவில் வெற்றி பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்த கல்லூரி அணிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்   மாநில அளவில் நடைபெறும்  போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்