ஈரோடு மாவட்டம் பவானி அருகே பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 8-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே குதிரைக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகன் திவாகர். இவர் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், திவாகர் இன்று வழக்கம் போல் பள்ளி பேருந்தில் சென்றுள்ளார். அப்போது திவாகர் படிக்கட்டில் நின்றபடி பயணித்துள்ளார்.
இதற்கிடையில், டிரைவர் பிரேக் அடித்ததால் நிலைத்தடுமாறி படியில் இருந்து கீழே விழுந்த மாணவன் மீது சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே மாணவன் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், 8 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…