Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

Latest News in Virudhunagar : சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை முயற்சி..! இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி..!

Muthu Kumar April 22, 2022 & 07:55 [IST]
Latest News in Virudhunagar : சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை முயற்சி..! இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி..!Representative Image.

Latest News in Virudhunagar : சிவகாசி அருகே கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து நர்சு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த ரேவதி என்பவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சிப்பிப்பாறையை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.  திருமணம் முடிந்த 2 மாதத்தில் செல்வராஜ் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து ரேவதியும் மதுரையில் தங்கி நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார்.

தற்கொலை முயற்சி

2 ஆண்டுகள் கழித்து கணவர் ஊருக்கு திரும்பி வந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க செய்து ரேவதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேவதி சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

வழக்கு

மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய அதிகாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சதுகிரி கோவிலுக்குச் செல்ல தடை - பக்தர்கள் ஏமாற்றம்! 

Tag: Virudhunagar News In Tamil | Virudhunagar News Live.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்