பொது விநியோக திட்டத்தின் கீழ் பயன் பெறும் குடும்ப அட்டைதாரர்களிடம் ஆதார் எண் குறித்த விவரங்களை கேட்க கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உணவு பொருட்கள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் வங்கிக் கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு அருகேயுள்ள கூட்டுறவு வங்கிகள் கணக்கு தொடங்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிக்கணக்கு இருந்தால் அதனுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி உணவுப் பொருள் வழங்கல் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் ரேஷன் அட்டைதாரர்களிடம் ஆதார் எண் குறித்த விவரங்களை கேட்கக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…