Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Tamilnadu Local Body Election 2022: பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த திமுக உறுப்பினர்

Gowthami Subramani March 06, 2022 & 10:00 [IST]
Tamilnadu Local Body Election 2022: பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த திமுக உறுப்பினர்Representative Image.

பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த திமுக உறுப்பினர். சாதி வெறி தான் காரணமாம்.

தமிழகத்தில் உள்ள 490 பஞ்சாயத்துகள், 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் மூலம், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் கவுன்சிலர், மற்றும் நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள் போன்றோர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதில் ஒரு கட்சி, இரு கட்சி அல்ல. சுயேட்சைக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்று போட்டியிட்டன. இதனால், அனைத்துக் கட்சிகளும் அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெற பிரச்சாரங்களை நடத்தி வந்தன. திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சிகள், போட்டி போட்டு வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டன.

இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் நாள் சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான போட்டி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் அடுத்த மூன்று நாள்களுக்குப் பிறகு, அதாவது பிப்ரவரி மாதம் 22 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் பின், அதற்கான முடிவுகளும் அன்றே வெளியிடப்பட்டன.

அதன் படி, வெளிவந்த முடிவில் திமுக அதிரடி வெற்றி பெற்றது. இந்த முறை அதிமுக எதிர்பாராத அளவிற்குத் தோல்வியைத் தழுவியது. பாஜக ஓரிரு இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது. இதன் படி, கடந்த மார்ச் மாதம் 2 ஆம் நாள் புதன்கிழமை அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன் படி, அனைத்துக் கட்சிகளிலும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பங்கேற்றனர்.

இதன் படி, ஈரோடு மாவட்டத்தில் திமுக 19 இடங்களிலும், அதிமுக 5 இடங்கள், சுயேட்சை கட்சிகள் ஒரு இடத்திலும், கம்யூனிஸ்ட் கட்சி இரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு, ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும் பங்கேற்று பதவியை ஏற்றுக் கொண்டனர். ஆனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி நகராட்சியில் 22 ஆவது வார்டு உறுப்பினர்களாகப் பதவியேற்ற சரவணன் அவர்கள், அடுத்த மூன்றாவது நாளிலேயே ராஜினாமா செய்தவதாக நகராட்சி ஆணையருக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, 22 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன், “பவானி நகராட்சியில் சாதி வெறி கொடிகட்டி பறக்கிறது. இந்த ஜென்மத்தில் நான் உறுப்பினராக இனிமேல் போட்டியிட மாட்டேன். நான் ராஜினாமா செய்வதற்கு நகர மற்றும் மாவட்ட செயலாளரிடம் அனுமதி கேட்டுள்ளேன். அவர்கள் அனுமதி அளித்த பிறகு, தனது பதவியை ராஜினாமா செய்வேன்” என்று இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற மூன்றே நாள்களில் ராஜினாமா செய்தது பவானி நகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு திமுக கட்சியினர் மற்றும் நகர, மாவட்ட செயலாளரின் முடிவுகள் என்னவாக இருக்கும் என்ற குழப்பங்கள் நிலவி வருகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்