Tue ,Sep 26, 2023

சென்செக்ஸ் 66,023.69
14.54sensex(0.02%)
நிஃப்டி19,674.55
0.30sensex(0.00%)
USD
81.57
Exclusive

களைகட்டிய கலைத்திருவிழா - 56 பள்ளி மாணவர்களிடையே போட்டா போட்டி!

Kanimozhi Updated:
களைகட்டிய கலைத்திருவிழா - 56 பள்ளி மாணவர்களிடையே போட்டா போட்டி! Representative Image.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்று வரும் கலைவிழாவிற்கான இறுதிக்கட்ட போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. 

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆறு வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தனி திறனை வெளிக்கொண்டுவரும் பொருட்டு கலைதிருவிழாவை நடத்த உத்தரவிட்டது.

அதன்படி 33 தலைப்புகளின் கீழ் பேச்சு, நடனம், கட்டுரை, நாடகம், இசை, ஓவியம், வாய்ப்பாட்டு, பொம்மாலாட்டம் , டிஜிட்டல் வரைகலை உள்ளிட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் மாணவ - மாணவியர் தங்களை தனி மற்றும் குழுக்களாக இணைத்து போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த கலைத்திருவிழாவின் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அந்தியூர் அருகே உள்ள தோப்பூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். 

கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வரும் கலைத் திருவிழா போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.  இறுதி நாளான நேற்று நடன போட்டிகள் நடைபெற்றன, பரதம், கோலாட்டம் , கிராமிய நடனம், ஒயிலாட்டம், மேற்கத்திய நடனம், பாரம்பரிய நடனம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன,

இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.  குறிப்பாக மலை கிராம மாணவர்களும் இந்த போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.மேலும் மலை கிராம மற்றும் கிராமப்புற மாணவர்கள் தங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை உணர்ந்ததாகவும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திய தமிழக அரசுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து மாணவ மாணவியர் தெரிவிக்கையில் பள்ளி ஆண்டு விழாக்களில் மட்டும்தான் இது போன்ற போட்டிகள் நடனங்கள் நடத்தப்படும், அவ்வாறு நடத்தப்படும் போட்டியிலும் தங்களது பள்ளிகளுக்குள்ளேயே நண்பர்களுடன் போட்டி போடுவோம், தற்போது சுமார் 56 பள்ளிகளை இருந்து மாணவ மாணவியர்கள் வந்துள்ளனர் அவர்களுடன் போட்டியிட்டு தங்களது திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் தங்களுக்கு உற்சாகமாக இருப்பதாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்