Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 68,865.12
0.00sensex(0.00%)
நிஃப்டி20,686.80
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

இன்று நள்ளிரவு முடிவுக்கு வரும் மீன்பிடித்தடைக்காலம் - மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தம்.

Surya Updated:
இன்று நள்ளிரவு  முடிவுக்கு வரும் மீன்பிடித்தடைக்காலம்   - மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தம்.Representative Image.

இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித்தடைக்காலம் நிறைவு பெறுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.

ஆண்டு தோறும் மீன் இன பெருக்கத்திற்காக ஏப்ரல் மாதம் 15 தேதி முதல் ஜூன்  மாதம் 15 தேதி வரை 61 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலும்   புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 15 கடலோர மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இந்த மீன் பிடி தடைக்காலம் நிறைவுபெறுகிறது.

இதனையடுத்து காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மீனவர்கள் விசைப்படகுகள் மூலம்   ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்காக தங்களது படகுகளை புதுப்பித்தும், புதிய வலைகள் பின்னியும், தயார் நிலையில் உள்ளனர்

இன்று இரவு மீன் பிடிக்க சென்றால் 7 நாட்கள் கழித்து திரும்பி வருவதனால் தங்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், முட்டை,  தண்ணீர் கேன், மருந்து பொருட்கள், உள்ளிட்டவைகளை  படகுகளில் எடுத்து செல்கின்றனர்.

மேலும் மீன்களை பதப்படுத்த   ஐஸ் கட்டிகளை படகுகளில் நிரப்பி கடலுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர்

61 நாட்கள் தடைக்காலத்தில் தங்களின் படகுகளுக்கு வர்ணம் பூசி பராமரித்தும், கிழிந்த வலைகளை பின்னியும் இஞ்ஜின் மோட்டார்களை பழுது பார்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்

இதனை அடுத்து இன்று நள்ளிரவு கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதற்காக தயாராகி வருகின்றனர்

ஐஸ் தட்டுப்பாட்டால் முன்பாகவே ஐஸ்கட்டிகளை படகுகளில் நிரப்பி டீசல்களைப் பிடித்து சிலிண்டர்களை ஏற்றி மீன்பிடிப்பதற்கு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்