சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக கொள்கை அடிப்படையில் தான் செயல்பட்டு வருகிறது. நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. திமுக தான் அடிமையாக செயல்படுகிறது. வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப் பெறும். இதற்காக கடுமையாக பணியாற்றி வருகிறோம்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை தள்ளிவிடும் அளவிற்கு திமுகவின் வன்முறை அரங்கேறி வருகிறது. எதேச்சதிகாரத்தில் தன்னிலை மறைந்து செயல்பட்டு வரும் திமுக அரசை விரட்டியடிக்கும் காலம் வரும். மக்களின் பிரச்னையை அரசிடம் எடுத்துச் செல்லும் பிரதான கட்சியாக அதிமுக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும். ஊழல் வழக்கில் கைதானவர் அமைச்சராக தொடர்ந்தால் மக்கள் அரசியலை மதிக்க மாட்டார்கள்.
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது தான். அதேபோல் நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் வரை போராடியதும் அதிமுக தான். காலத்திற்கு ஏற்பவும், தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைத்துக் கொள்ளும் கட்சி திமுக என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…