தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்யாது இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை முதல் பெரியகுளம் பகுதியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான சொர்க்கம் வனப்பகுதி, சோத்துப்பாறை அணை வனப்பகுதி, கல்லார் வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, முருகமலை வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அதேபோல் பெரியகுளத்தை சுற்றியுள்ள தேவதானப்பட்டி, புதுப்பட்டி, வடுகபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் லேசான சாரல் மழை பெய்ய துவங்கியதை தொடர்ந்து பின்பு பரவலாக மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த மழையானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாது இருந்த நிலையில் தற்போது இரவு முதல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் குறிப்பாக மானாவாரி பயிர் செய்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…