Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

ரூ.1000 மழை நிவாரணம் - இன்று தொடங்கியது

Editorial Desk Updated:
ரூ.1000 மழை நிவாரணம் - இன்று தொடங்கியதுRepresentative Image.

 

சீர்காழி மற்றும் கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. 

 

வடகிழக்கு பருவ மழையால் கடந்த நவம்பர் மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, கொள்ளிடம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. மழை நீர் சூழ்ந்ததால் வீடு மற்றும் விளைநிலங்களில் பாதிப்பை எதிர்கொண்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இன்று அரசு சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சீர்காழி அருகே மணி கிராமத்தில் நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் நிகழ்வை தொடங்கிவைத்தார். இதன் மூலம் இன்று முதற்கட்டமாக மணி கிராமத்தைச் சேர்ந்த 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் மொத்தம் 238 ரேசன் கடைகளில் 1,61,647 குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்