திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 17 சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் தொல்லை அளித்த 22 வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தாராபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதான குணால் என்னும் இளைஞர், கூலி தொழிலாளியாக உள்ளார். இவர் அலங்கிய பகுதியை சேர்ந்த 17 வயதான ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். இவ்வாறு பழக்கத்தில் இருந்த இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி பெண்ணை அழைத்து சென்றுள்ளார். தன் உறவினர் வீட்டில் வைத்து அந்த 17 வயதான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பெண்ணின் பெற்றோர் தங்கள் பெணனை கடத்தி சென்றது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். அளித்த புகாரின் பேரில் மகளிர் ஆய்வாளர் சுஜாதா செய்த விசாரணையில் குணால் பெண்ணிடம் பாலியல் அத்துமீறியது தெரிய வந்துள்ளது.
இறுதியில் குணால் மீது 17 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய குற்றத்திற்கும் கடத்திய குற்றத்திற்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின் நீதிமன்றத்தில் உட்படுத்தப்பட்ட குணால் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…