சென்னை: தீபாவளியை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் பரிசு, போனஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், சென்னையை சேர்ந்த ஒரு நகைக்கடை உரிமையாளர் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 1.20 கோடி செலவில் கார், இருசக்கர வாகங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள சலானி ஜுவல்லரி மார்ட் நகைக்கடை உரிமையாளர் ஜெயந்தி லால் சாயந்தி என்பவர் தனது கடையில் பணியாற்றும் ஊழியர்கள் 10 பேருக்கு காரும், 20 பேருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய நகைக்கடை உரிமையாளர் ஜெயந்தி லால், "என் வாழ்க்கையின் கடினமான காலக்கட்டத்திலும், உயர்விலும் எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்னுடைய ஊழியர்கள். அதுமட்டுமல்லாமல், இவர்கள் தான் என்னுடைய 2வது குடும்பம்.
அந்தவகையில், நான் கொடுத்த தீபாவளி பரிசு நிச்சயம் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்வுக்குப்பின் என் முழுமனதும் நிறைவாக இருக்கிறது. இதுபோல, ஒவ்வொரு கடை உரிமையாளரும் தங்களது ஊழியர்களை மதித்து அவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில், இவரின் வார்த்தைகள் மற்றும் அன்பும் இணைய வாசிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…