Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

விஜய் சொன்னதில் என்ன பிரச்சினை..? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Saraswathi Updated:
விஜய் சொன்னதில் என்ன பிரச்சினை..? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி Representative Image.

அரசியலுக்கு யார் வர வேண்டும், வரவேண்டாம் என்று சொல்வதற்கான உரிமை யாருக்கும் கிடையாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெற்றோர்கள் ஓட்டுக்கு  பணம் வாங்காமல் மாணவர்கள்தான்  பார்த்துக் கொள்ள வேண்டும் என்று  நடிகர் விஜய் கூறியுள்ளார், அது பற்றிய உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். 

அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், நல்லது தானே சொல்லி இருக்கிறார். அதில் ஏதாவது பிரச்சனையா? என்றார். மேலும், விஜய்  பேசியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும், நான் இன்னும் அவர் பேசியதை பார்க்கவே இல்லை. பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்றும் உதயநிதி தெரிவித்தார்.

விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக செய்தியாளர் கூறியதற்குயாரு வரணும் வர வேண்டாம் என்று சொல்வதற்கு யாருக்குமே உரிமை கிடையாது என்று பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு முதலமைச்சர் அரசாணை வெளியிட்டிருக்கிறார். அமைச்சராக அவர் தொடர்வார். பாஜகவின்  குரலாக ஆளுநர் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்