Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Women Selling Alcohol: பிளாக்கில் மது விற்ற பெண் கைது...

Priyanka Hochumin April 21, 2022 & 18:00 [IST]
Women Selling Alcohol: பிளாக்கில் மது விற்ற பெண் கைது...Representative Image.

Women Selling Alcohol: கரூர் மாநகராட்சி கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் மது விற்பனை செய்த ஒரு பெண், அதனால் நடந்த பரபரப்பான சம்பவம். பிளாக்கில் சரக்கு விற்ற ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஆண்கள் தான் குடும்ப செலவிற்கு காசு கொடுக்காமல், சம்பத்திற்கும் பணத்தில் பாட்டில் பாட்டிலாக மது வாங்கி குடிக்கிறார்கள். குடித்து விட்டு வீட்டிற்கு சென்று மனைவி குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். பின்பு கான்செர், லிவர் கோளாறு என்று லட்சம் லட்சமாக செலவு செய்து இறுதியில் மரணத்தை தழுவுகிறார்கள். இதையே தங்கள் வேலையாக சையது கொண்டிருக்க, தற்போது ஆணும் பெண்ணும் சமம் என்று பெண்களுக்கு குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

கொரோனா கால கட்டத்தில் மது விற்க தடை அறிவித்ததை தொடர்ந்து, மதுவால் அடிமையான குடி போதைக்கு ஆளானவர்கள் செய்யாத காரியங்கள் இல்லை. சானிடைசர் உட்கொள்வது, கள்ள சாராயம் காய்ச்சுவது என்று பல விஷயங்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர். பிறகு சிறிது நாட்கள் கழித்து மது விற்பனை ஆரம்பம் என்று சொன்ன உடன் கோடி கணக்கில் மது பாட்டில்களை வாங்கி அரசின் கஜானாவை நிரப்பினர். அதில் ஆண்களுடன் பெண்களும் கியூவில் நின்று சரக்கு வாங்கி செல்லும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின. 

தற்போது பெண்கள் மது அருந்துவதையும் தாண்டி அதை விற்கவும் தொடங்கினர். கரூரில் கிருஷ்ணராயபுரம் வட்டம் வரகூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவறின் மனைவி சின்ன பொண்ணு. இவருக்கு 48 வயது ஆகிறது. இவர் அரசாங்கத்திற்கு எதிராக சட்டவிரோதமாக வீட்டில் மது விற்பனை செய்துள்ளார். பிளாக்கில் மது விற்ற தகவல் எப்படியோ தெரிந்து கொண்ட லாலாப்பேட்டை போலீசார் சம்பா இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இந்த காரியத்தை செய்த சின்னப்பொண்ணு என்பவரை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்துள்ள 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து காவல் துறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்