Sun ,Sep 24, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

Erode latest news : ஈரோட்டில் இளம் பெண் தற்கொலை.. பின்னனி என்ன..?

Muthu Kumar May 31, 2022 & 12:59 [IST]
Erode latest news : ஈரோட்டில் இளம் பெண் தற்கொலை.. பின்னனி என்ன..?Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையத்தை சேர்ந்த ரகு என்பவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் சவிதா கடந்த 2015-ம் ஆண்டு வெங்கடாசலம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அதே பகுதியில் உள்ள ரோஜா நகரில் தனது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் இத்தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இளம் பெண் தற்கொலை

இந்நிலையில், நேற்று ரகுவின் செல்போனிற்கு தொடர்பு கொண்ட மருமகன் வெங்கடாசலம் உங்கள் மகள் சவிதா தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை கேட்ட வெங்கடாசலம் அதிர்ச்சியில் சவிதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தனது மகள் சவிதா மூச்சுப் பேச்சில்லாமல் இறந்த நிலையில் சோபாவில் படுக்கவைக்கப்பட்டுள்ளதை பார்த்து கதறி கதறி அழுதுள்ளார்.

இதனையடுத்து, சவிதா தனது படுக்கை அறையில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார். 

புகார்

இதுகுறித்து வெங்கடாசலம் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிள்ளார். தகவலறீந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சவிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும், சவிதாவின் தந்தை ரகு தனது மகள் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாகவும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிபடையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்