Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

பைக் சாகசம் செய்த யூடியூப் பிரபலம்...நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

Priyanka Hochumin October 03, 2022 & 11:02 [IST]
பைக் சாகசம் செய்த யூடியூப் பிரபலம்...நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! Representative Image.

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவில் சென்னை அண்ணா சாலை, தேனாம்பேட்டை திமுக அலுவலக அறிவாலயம் எதிரே இருக்கும் பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக வீடியோ வெளியானது. இப்படி மக்களுக்கு இடஞ்சல்களை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட இந்த இளைஞர்களை பாண்டிபஸார் போக்குவரத்து புறனாய்வு பிரிவு அதிகாரிகள் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரிக்கும் பொது, ஹைதெராபாத்தில் பைக் சாகச யூடியூப் பிரபலமான அலெக்ஸ் தீனா என்பவர் அன்று சென்னை வந்ததாகவும், அவருடன் சேர்ந்து பைக் சாகசம் செய்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் ரொம்ப பயங்கரமான சாகசத்தில் அவர் தான் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளனர். அதனை அடிப்படையில் கொண்டு அலெக்ஸ் தீனாவை கைது செய்ய காவல் துறையினர் தேடி வந்துள்ளனர். ஆனால் அவர் உஷாராக நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் கேட்டு பெற்றுள்ளார். இவருக்கு வழங்கிய நிபந்தனை ஜாமீனில் நூதன முறையில் வழங்கியுள்ளனர்.

எந்த இடத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளாரோ அதே சாலையில் டிராபிக் சிக்னல் போது போக்குவரத்துக்கு விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று திங்கள் காலை 9.30 - 10.30 மணி வரை மற்றும் மாலை 5.30 - 6.30 மணி வரை வாக ஓட்டிகளுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்.

அடுத்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவனமனையில் அவசர பிரிவில் வாரத்திற்கு 6 நாட்கள் காலை 8 முதல் 12 மணி வரை பணிபுரிய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன் காரணமாக இன்று காலை முதல் மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார், மேலும் தன்னுடைய செயலுக்காக மிகவும் வருந்துவதாகவும் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்